விழுப்புரம் அருகே கால்வாயை தூர்வாரிய கிராம மக்கள்

விழுப்புரம் அருகே  கால்வாயை தூர்வாரிய கிராம மக்கள்
Updated on
1 min read

விழுப்புரம் அருகே எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டிலிருந்து பிரியும்11 வாய்க்கால்களில் ஒன்று ராமானுஜபுரம் கிராமம் வழியாக ஆனாங் கூர் ஏரியை சென்றடைகிறது. இந்த வாய்க்காலை தூர்வாரக் கோரி கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து இரண்டை கி.மீ தூரம் கொண்ட வாய்க்காலை இயந்திரம் மூலம் நேற்று கிராம மக்கள் தூர் வாரினர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியது:

பொதுப்பணித்துறை கட்டுப்பாட் டில் உள்ள இக்கால்வாயை தூர்வார நிதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஊர்பொதுப்பணத்தில் தூர் வாரியுள் ளாம். நிதி வந்தவுடன் இதற்கான செலவுத்தொகையை கொடுத்து விடுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழை நீர் செல்ல வேண்டும் என்பதற்காக அவசரமாக தூர் வாரியுள் ளோம் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து விவரம் அறிய பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசனை தொடர்புகொண்டு கேட்டபோது, "இந்த தகவல் நீங்கள் சொல்லிதான் எனக்கு தெரியவருகிறது. அப்படி எதுவும், யாரும் சொல்லவில்லை" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in