

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்புபருவத்தில் கயத்தாறு, கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம், கருங்குளம் ஆகிய வட்டாரங்களில் மானாவாரிப் பயிராகஏறத்தாழ 30,000 ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட் டுள்ளது.
விளாத்திகுளம் மற்றும் புதூா்பகுதிகளில் பிந்தைய விதைப்புசெய்த மக்காச்சோளப் பயிரில்படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ. முகைதீன் தலைமையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சியியல் துறைவிஞ்ஞானி ரவி, வேளாண் துணை இயக்குநர்கள் முருகப்பன் (நுண்ணீா் பாசனம்), பழனி வேலாயுதம் (மாநில திட்டம்) ஆகியோர்கொண்ட குழுவினர் விளாத்திகுளம் வட்டாரம் கோடாங்கிபட்டி மற்றும்புதூர் வட்டாரம் அயன்வடமலாபுரம், கீழகரந்தை ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
மக்காச்சோளம் பயிரிட்டுள்ளவிவசாயிகளிடம் படைப்புழு தாக்குதல் மேலும் பரவாமல் தடுத்திடவும், பயிரின் வளா்ச்சி மற்றும் மகசூலில் பாதிப்பு வராமல் காத்திடவும் பல்வேறு பரிந்துரைகளை நிபுணர் குழுவினர் வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டைப் போலவே தற்போதும் மக்காச்சோளப் பயிரில் மட்டுமின்றி வெள்ளைச்சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களிலும் படைப்புழு தாக்குதல் அதிகரித்து வருகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், வேளாண்மை அதிகாரிகள் படைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த தொழில்நுட்ப அறிவுரைகளை மட்டும் வழங்கி வருகின்ற னர். இதனால் தங்களுக்கு எவ்விதபலனும் இல்லை என்றும் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இவற்றை பயிரிட்டுள்ளவர்களுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேளாண் அதிகாரிகள் மீது விவசாயிகள் அதிருப்தி