தூத்துக்குடியைச் சேர்ந்த 130 விசைப்படகுகள் கரை திரும்பாததால் பரபரப்பு

தூத்துக்குடியைச் சேர்ந்த 130 விசைப்படகுகள் கரை திரும்பாததால் பரபரப்பு
Updated on
1 min read

தூத்துக்குடியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற 130விசைப்படகுகள் இன்னும் கரை திரும்பவில்லை. அவற்றைஉடனடியாக கரைக்கு திரும்பவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாககடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மற்றும்நாட்டுப்படகு மீனவர்கள் 2-வது நாளாக நேற்றும் கடலுக்குச் செல்லவில்லை.

தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற 130 விசைப்படகுகள் இன்னும் கரை திரும்பவில்லை. இவற்றில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். நிவர் புயல் குறித்து இந்தப் படகுகளுக்கு மீன்வளத்துறை சார்பிலும், உறவினர்கள் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, `தூத்துக்குடி வர இயலாத படகுகள் அருகேயுள்ள பகுதியில் கரை சேர வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே,பெரும்பாலான படகுகள் இன்று காலைக்குள் ஆங்காங்கே கரைசேர்ந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்’ என தெரிவித்தனர்.

மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் தடுக்கவும், புயல் நிலவரத்தை கண்காணிக்கவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர கிராமங்களிலும் மீன்வளத்துறை களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in