Published : 25 Nov 2020 03:16 AM
Last Updated : 25 Nov 2020 03:16 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் பாதிப்புகளை தெரிவிக்க தொலைபேசி எண்கள் ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியீடு

தி.மலை மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்களை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று வெளி யிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொள்ள, ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை 1077 மற்றும் 04175 - 232377 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க லாம். மேலும், 18 ஊராட்சி ஒன்றியஅளவில் தொடர்பு கொள்ள வேண் டிய தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை ஒன்றியத் தில் 04175 - 253074, 250541, துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் 04175 - 241266, 241201, கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 04175 - 242222, 242988, தண்டராம்பட்டு ஒன்றியத் தில் 04188 - 246899.

செங்கம் ஒன்றியத்தில் 04188 -222322, புதுப்பாளையம் ஒன்றியத் தில் 04188 - 242432, கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 04181 - 241222, 241026, போளூர் ஒன்றியத்தில் 04181 - 222040, ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் 04181 - 245245, 245420, ஆரணி ஒன்றியத்தில் 04173 - 226353, மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 04173 - 226088.

செய்யாறு ஒன்றியத்தில் 04182 - 222258, வெம்பாக்கம் ஒன்றியத்தில் 04182 - 247221, அனக்காவூர் ஒன்றியத்தில் 04182 - 222253, பெரணமல்லூர் ஒன்றியத்தில் 04183 - 245204, சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 04181 - 252229, வந்தவாசி ஒன்றியத்தில் 04183 - 225064, தெள்ளாறு ஒன்றியத்தில் 04183 - 244024 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

ஆற்றில் குளிக்கவும், கடந்து செல்லவும் கூடாது. பழைய கட்டிடங்களில் தங்கி இருப் பவர்கள், அங்கிருந்து வெளி யேறி, சிறப்பு முகாம்களில் தங்க வேண்டும்.

மின்னல் தாக்கும்போது குடைகளை பயன்படுத்தக் கூடாது, மரத்தின் கீழே நிற்கக்கூடாது. நீர் நிலைகளில் குளிக்கக்கூடாது. தாழ்வானப் பகுதியில் வசிப் பவர்கள், அரசு முகாம்களில் தங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மெழுகுவர்த்தி மற்றும் தீப் பெட்டிகளை தயாராக வைத்திருக்க வேண்டும். மருந்து, பால் பவுடர், டார்ச் லைட் மற்றும் சுகாதாரப் பொருட்களை சேமித்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x