வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 31560 பேர் மனு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 31560 பேர் மனு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த16-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 2493 வாக்குச் சாவடிகளை உள்ளடக்கிய 1043 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், பதிவுகளில் திருத்தம், பெயர் நீக்கம், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 21, 22-ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

அதன்படி, புதிதாக வாக்காளர்கள் பெயர் சேர்க்க படிவம் 6-ல் 31560 பேர், இறந்தவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க படிவம் 7-ல் 2484 பேர், பதிவுகளில் திருத்தம் செய்யபடிவம் 8-ல் 4047 பேர், ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ-ல் 2741 பேர் என மாவட்டம் முழுவதும் 40832 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதேபோல, டிசம்பர் 12, 13-ம் தேதிகளில் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in