கொலை வழக்கில் தொடர்புடைய  4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published on

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அருண். இவரை அக்.22-ம் தேதி காளியம்மன் கோயில் அருகே முன்விரோதம் காரணமாக சிலர் வெட்டிக் கொலை செய்தனர். திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜார்ஜ்(32), சபரிகாந்தன்(32), பிரான்சிஸ்(36), செல்வகுமார்(23) ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் இவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் எஸ்.பி., ரவளிபிரியா மாவட்ட ஆட்சியர் மு.விஜய லட்சுமிக்கு பரிந்துரை செய்தார். இதை யடுத்து நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். ஜார்ஜ், சபரிகாந்தன், பிரான்சிஸ், செல்வகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in