இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தும்முசின்னம்பட்டி கிராமத்தினர்.
Regional02
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரிவிருதுநகர் ஆட்சியரிடம் 28 குடும்பங்கள் மனு
அருப்புக்கோட்டை அருகே உள்ள தும்முசின்னம்பட்டியைச் சேர்ந்த 28 குடும்பத்தினர், ஆட்சியரிடம் இலவச பட்டா கோரி நேற்று மனு கொடுத்தனர். அதில், அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது:
தும்முசின்னம்பட்டி, தொப்பலாக்கரையில் 28 குடும்பத்தினர் சுமார் 40 ஆண்டுகளாக சொந்த வீடு இல்லாமல் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து வரும் நாங்கள் சுமார் 40 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருவதால் எங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி உதவ வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
