

வங்கக் கடலில் உருவான நிவர்புயலால் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் மூன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் இது புயலாக மாறிவடமேற்கு திசையில் நகர்ந்துநாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று3-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புயல் தாக்கத்தால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் கடும் சீற்றமாக இருக்கும், அலைகள் ஆக்ரோஷமாக எழும்பும். எனவே, மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கடற்கரை கிராமங்களுக்கும் மீன்வளத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்குள்ள 412 விசைப்படகுகள் மற்றும் 3,000 நாட்டுப்படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
நாகர்கோவில்