ஆபத்தான கட்டிடங்களில் வசிப்போர் நிவாரண முகாமில் தங்க அறிவுறுத்தல்

ஆபத்தான கட்டிடங்களில் வசிப்போர் நிவாரண முகாமில் தங்க அறிவுறுத்தல்

Published on

வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக, திரு வாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பவனத்தில் நிவாரண முகாமுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ள பல்நோக்கு பேரிடர் மையக் கட்டிடத்தை ஆட்சியர் வே.சாந்தா நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “திருவாரூர் மாவட்டத்தில் நாளை(இன்று) முதல் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள தனியார் கட்டிடங்களில் தங்கியுள்ள பொதுமக்கள், அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்க வேண்டும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in