சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

Published on

புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சரக்கு லாரி ஒன்று நேற்று சென்றது. மரக்காணம் அடுத்த ஆட்சிகாடு அருகே, எதிர்திசையில் சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில்,பைக்கில் பயணித்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞரும், 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் போலீஸார் இருவர் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கனகச்செட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்துக் குறித்து மரக்காணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண போலீஸ் குழு சென்னை சென்றுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in