

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சித்தர் கூடம் சார்பில் இளைய தலைமுறையினரான மாணவர்களுக்கு விதைப்பந்துகள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது.
இதில் விதைப்பந்து செய்வது, பனங்கொட்டையில் பொம்மைகள் செய்வது குறித்து க.அசோக்குமார் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். சித்தர்கூடம் களப்பணி நண்பர்கள் சோம்நாத், மூர்த்தி, மணிகண்டன், கண்ணன், கார்த்திக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.