

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் கிராம உதயம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கலைப்பயணம் சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதீக் தயாள் தொடங்கி வைத்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குநர் வி.சுந்தரேசன் தலைமை வகித்தார். பெட்காட் மாவட்டச் செயலாளர் கோ.கணபதிசுப்பிரமணியன், நூலகர் முத்துகிருஷ்ணன், வழக்கறிஞர் எஸ்.புகழேந்தி பகத்சிங், சமூக ஆர்வலர் சு.முத்துசாமி ஆகியோர் கலைப்பயணத்தை வழிநடத்தினர். சேரன்மகாதேவி, மேலச்செவல், வி.கே.புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விழிப்புணர்வு கலைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
வட்டாட்சியர் வெற்றிச்செல்வி, துணை வட்டாட்சியர் சீதாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.