Published : 22 Nov 2020 03:14 am

Updated : 22 Nov 2020 03:14 am

 

Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

விவசாயிகளின் நிலங்களுக்கே சென்று ஆலோசனை வழங்க நடவடிக்கை

திருவள்ளூர்: வேளாண்மை துறையை வலுப்படுத்த, உழவர் அலு வலர் தொடர்பு திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநரை குழு தலைவராகவும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி, வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு வட்டார விரிவாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழு 15 நாட்களுக்கு ஒருமுறை கூடி, அடுத்த 15 நாட்களுக்கு பயிர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்கள், செயல்விளக்கங்கள் மற்றும் விரிவாக்க பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் ஆகியவற்றை கலந்தாலோசித்து முடிவு செய்யும். உதவி வேளாண்மை அலுவலர்கள் 2 வாரங்களுக்கு ஒருமுறை அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் பயணம் மேற்கொண்டு வயல்களை ஆய்வு செய்து, முன்னோடி விவசாயிகளையும், இதர விவசாயிகளையும் சந்தித்து பயிர்களுக்கு தேவையான தொழில்நுட்பங்களை வழங்குவார்கள் என ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x