ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான ஈமச்சடங்கு நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு

ஆதிதிராவிடர்,  பழங்குடியினருக்கான ஈமச்சடங்கு நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு
Updated on
1 min read

ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட இனத்தோரில் எவராவது இறந்தால் அவர்களுக்கு நகர்புறமாக இருந்தால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றின் மூலமாகவும், கிராமப்புறமாக இருந்தால் ஊராட்சிகள் மூலமாகவும் ஈமச்சடங்கு நிதி ரூ.2,500 வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விலைவாசி உயர்வு காரணமாக அரசு வழங்கும் இந்த நிதியை அதிகரித்து ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து இந்நிதி தற்போது ரூ.2,500- ல் இருந்து ரூ.5 ஆயிரமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மூலம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இதற்கான அனுமதி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in