

மதுரை திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளத்தைச் சேர்ந்தவர் மொட்டையன்(56). இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்தார். இவருக்கு முத்து முனியாண்டி, முத்துமணி ராஜா ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மொட்டையன் நேற்று அதிகாலை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், மொட்டையன் சில நாட்களுக்கு முன் தனது சொத்துக்களை இளைய மகன் முத்துமணிராஜாவுக்கு எழுதி வைத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திர மடைந்த மூத்த மகன் முத்துமுனியாண்டி, ஆள் வைத்து தந்தையை கொலை செய்தது தெரிய வந்தது. பெருங்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து வலையங்குளத்தைச் சேர்ந்த அருள், செல்வம், சிலைமான் அருகே உள்ள எல்.கே.டி நகர் ராமர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மூத்த மகன் முத்துமுனியாண்டியைத் தேடி வருகின்றனர்.