Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM

சம்பா, தாளடி சாகுபடிக்கு நவ.24-க்குள் பயிர்க் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 1.32 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பயிர்க் காப்பீடு செய்வதற்கு நவ.30-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், நவ.25, 26 தேதிகளில் புயல் மற்றும் கனமழை வரும் என எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள் நவ.24-ம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். அதன்படி, ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 வீதம் பிரீமியமாக செலுத்தி, உரிய ஆவணங்களுடன் தேசியமயமாக்கப்பட்ட வணிக வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் ஆகியவற்றின் மூலமாக காப்பீடு செய்து கொள்ளலாம் என நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x