புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மேலும் 4 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில்  அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்  மேலும் 4 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு
Updated on
1 min read

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக் கீட்டின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 அரசுப் பள்ளி மாணவர்கள் பல்வேறு அரசு மருத்து வக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.

தற்போது, அறந்தாங்கி அருகே உள்ள தாந்தாணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.கிருத்திகா, மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.காயத்ரி மற்றும் மணமேல்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எ.பிளெஸ்சி ஆகியோருக்கு அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும், ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.நிதிக்கு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. உள் இடஒதுக்கீட்டின் மூலம் நிகழாண்டில் இம்மாவட்டத்தில் இருந்து மொத்தம் 15 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் மாநில அளவில் 6-வது இடத்தில் புதுக்கோட்டை உள்ளது.

அரசு ஒதுக்கீட்டின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள கீரமங்கலம் அருகே செரியலூர் இனாம் கிராமத்தைச் சேர்ந்த எ.திவ்யா, எம்.தாரணிகா மற்றும் ஆர்.ஹரி கரன் ஆகியோருக்கு தலா ரூ.10,000 வீதம் செரியலூர் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் அன்பரசன் நேற்று வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in