நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க மானியம்

நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க மானியம்
Updated on
1 min read

தென்காசி ஆட்சியர் சமீரன் அறிக்கை:

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் முதல்கட்டமாக 25 பேருக்கு ஆயிரம் கோழிகள் கொண்ட நாட்டுக்கோழி பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. பயனாளிகள் கோழி வளர்ப்பில் ஆர்வம் மற்றும் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். 2,500 சதுரஅடி கொண்ட கோழிக்கொட்டகை அமைப்பதற்கு ஏதுவாக இடம் வைத்திருக்க வேண்டும். கோழிகள் வளர்ப்பதற்கு தேவைப்படும் தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் குடவை ஆகியவற்றை, தாங்களாகவே கொள்முதல் செய்துகொள்ள வேண்டும்.

கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கை கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப் படும். பயனாளிகளில் 30 சதவீதத்தினர் கட்டாயமாக ஆதி திராவிடர், பழங்குடி யினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகள் தொடர்ந்து 3 ஆண்டுகள் நாட்டுக்கோழி பண்ணையை செயல்படுத்த உறுதி வழங்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப் படும் பயனாளிகளுக்கு ஆயிரம் நாட்டுக் கோழிகள் கொள்முதல் செய்வதற்கும், தீவனம் வாங்குவதற்கும், குஞ்சு பொறிப்பக கருவி வாங்குவதற்கும் 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக உதவி மருத்துவர்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று, வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in