Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

கந்தசுவாமி கோயில் வளாகத்தில் சூரசம்ஹார உற்சவம்

கந்தசுவாமி கோயிலில் சூரசம்ஹார உற்சவத்தில் வள்ளி, தெய்வானை யுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எருந்தருளிய முருகப்பெருமான்.

திருப்போரூர்: கந்தசுவாமி கோயில் வளாகத்தில் நடைபெற்ற சூரசம்ஹார உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், வேல் ஏந்தி சூரபத்மனை வதம் செய்தார்.

நேற்று சூரசம்ஹார உற்சவத்துக்காக காலை 11 மணிக்கு சரவணப்பொய்கை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் கோயில் மற்றும் குளத்துக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. சூரசம்ஹார உற்சவத்தின்போதும் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கோயில் கொடிமரத்தின் முகப்பில் உள்ள 16 கால் மண்டபத்தின் வெளியே சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் உற்சவம் எளிய முறையில் நடைபெற்றது. இதை வெளியில் நின்றபடி சிறிதளவு பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்திவேல் தலைமையில், மேலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பணியாளர்கள் மேற்கொண்டனர். உற்சவத்தில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x