Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM
தேனி மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வருவாய்த் துறை அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் பார்வைக்கு இப்பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இதில் பெயர் விடுபட்டு இருத்தல், திருத்தம் மற்றும் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்க உள்ளது. இம்முகாம் இன்றும், நாளையும், டிச.12, 13 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை, அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குச் சென்று உரிய திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT