நடைபாலத்தை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நடைபாலத்தை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

திருப்பூர் மாநகராட்சி செல்லம்மாள் காலனி அரிசி கடை வீதியில், பிரதான சாலையில் உள்ள தரைப்பாலம் சிதலமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கழிவுநீருக்குள் தவறி விழும் அச்சத்தில் செல்ல வேண்டியுள்ளதாக தெரிகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண கோரி, மாநகராட்சி மண்டல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மற்றும் பாஜகவினர், முன்னாள்கவுன்சிலர் ஆர்.நடராஜன் தலைமையில் திரண்டு செல்லம்மாள் காலனி பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு மாநகராட்சி உதவிப் பொறியாளர் பிரபாகர் பேச்சுவார்த்தை நடத்தினார்.உரியநடவடிக்கை எடுப்பதாகஉறுதியளிக்கப்பட்டதால், அனைவரும் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in