

துணிச்சலுடன் உயிரை காப்பாற் றுதல், அரசு பொது சொத்துக்களை காப்பாற்றுதல் மற்றும் இதர துணிச்சலான செயல்களை புரிந்த பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு அண்ணா விருது வழங்கப்படவுள்ளது.
அண்ணா பதக்கம் 2021ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி குடியரசுதின விழாவில் முதல்வரால் வழங் கப்படும்.
இந்த விருதுக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியா னவர்கள், விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 7401703485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று நேற்று தான் செய்திக்குறிப்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது, "இதற்கான அறிவிப்பு மாநில விளையாட்டுத்துறையால் கடந்த 13-ம் தேதி வெளியிடப்பட்டது. அதை ஆட்சியரின் அனுமதி பெற்றபின் நேற்றுதான் ஊடகங்க ளுக்கு அளிக்க முடிந்தது. விண் ணப்பிப்போர் நேரில் அணுகினால் சற்று தாமதமானாலும் ஏற்றுக் கொள்ளப்படும்" என்று தெரிவித் தனர்.