ராமநாதபுரத்தில் வியாபாரிகள் மறியல்

ராமநாதபுரத்தில் வியாபாரிகள் மறியல்
Updated on
1 min read

ராமநாதபுரம் நகரில் உள்ள சாலை தெருவில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து முழங்கால் அளவுக்கு தேங்கியுள்ளது. இதனால் கடைகளை திறக்க முடியாமல் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில், கழிவு நீரை அகற்றவும், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தரத் தீர்வாக வடிகால் வசதியை முறைப்படி ஏற்படுத்தவும் வலியுறுத்தி சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் ஆய்வாளர்கள் முத்துபாண்டி (பஜார் காவல் நிலையம்), சரவணபாண்டி (நகர் காவல் நிலையம்) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் நகராட்சியின் நீர் உறிஞ்சும் வாகனம் வரவழைக்கப்பட்டு கழிவு நீர் அகற்றப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in