

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன ஊழியர்கள் 20 சதவீத போனஸ் கேட்டு முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் இப்போராட்டத்தைக் கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன ஊழியர் சங்க (சிஐடியு) தலைவர் கே.பச்சமால் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் குமரவடிவேல், முன்னாள் செயலாளர் முருகவேல், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் அ.சுடலைக்காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.