Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

சானமாவு வனத்தில் 30 யானைகள் முகாம் 25 கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஓசூர்

சானமாவு காப்புக் காட்டில் 30 யானைகள் முகாமிட்டுள்ளதால் ஓசூர் வனச்சரக பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் ஒலி பெருக்கி மூலமாக வனத்துறை யினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் பயிரிட்டுள்ள கேழ்வரகு பயிர் அறுவடைக்குத் தயாராக உள்ளது. இவற்றை உண்பதற்காக ஓசூர் வனச்சரகத்தில் 30 யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். யானை களை ஜவளகிரி காப்புக்காட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.

இதனிடையே ஓசூர் வனச்சரகத்தில் முகாமிட்டுள்ள 30 யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையைச் சேர்ந்த 25 பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது. ஓசூர் வனச்சரகத்தை ஒட்டியுள்ள பீர்ஜேப்பள்ளி, நாயக்கனப்பள்ளி, போடூர், ஆழியாளம், சானமாவு உள்ளிட்ட 25 கிராமங்களில் வசிக்கும் மக்கள், விறகு சேகரிப்பு, இரவு நேர காவல் பணி, கால்நடை மேய்ச்சல் உள்ளிட்ட பணிகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x