

தேவகோட்டையில் 102 மி.மீ. மழை பெய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. சிற்றாறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பதிவான மழையளவு (மி.மீ.ல்) விவரம்:
சிவகங்கை- 65.4, மானா மதுரை- 51.8, இளையான்குடி- 49.4, திருப்புவனம்- 42.4, தேவகோட்டை- 102.4, காரைக்குடி- 92, திருப்பத்தூர்- 94, காளையார்கோவில்- 73.4, சிங்கம்புணரி- 100.4.