சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் குளறுபடி தேர்தல் அதிகாரிகள் பதவி இறக்கம்

சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் குளறுபடி தேர்தல் அதிகாரிகள் பதவி இறக்கம்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் குளறுபடிக்குக் காரணமான தேர்தல் அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சாக்கோட்டை ஒன்றியம் சங்கரா புரம் ஊராட்சித் தலைவர் தேர்தலில் முன்னாள் ஊராட்சித் தலைவர் மாங்குடியின் மனைவி தேவி, தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகி ஐயப்பனின் மனைவி பிரிய தர்ஷினி போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் தேவி வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரியும், பிடிஓவுமான மாலதி சான்று வழங்கினார்.

சில வாக்குகளை எண்ணாமல் முடிவுகளை அறிவித்ததாகக் கூறி எதிர்தரப்பினர் பிரச்சினை செய்ததை அடுத்து, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த அப்போதைய ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவிட்டார். அப்போது பிரியதர்ஷினி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது

இருவருக்கும் வெற்றிச் சான்றிதழ் வழங்கியதை அடுத்து, அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடியும் முன்பே, முடிவுகளை அறிவித்ததாகக் கூறி சாக்கோட்டை பிடிஓ மாலதி, துணை பிடிஓ பர்வதவர்த்தினி ஆகியோருக்கு ஜன.9-ல் குற்றக் குறிப்பாணை வழங்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலர் ரமேஷ் நடத்திய விசார ணையில் குற்றச்சாட்டு உண்மை எனத் தெரிய வந்ததாகக் கூறி பிடிஓ மாலதியை துணை பிடிஓ ஆக வும், துணை பிடிஓ பர்வதவர்த்தினியை உதவியாளராகவும் பதவி இறக்கம் செய்து ஆட்சியர் உத்தர விட்டார்.

இதேபோல் கண்ணங்குடி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலு வலர் பாஸ்கரன் மீது அலுவல் விதிமுறைகளை மீறியதாகப் புகார் எழுந்ததையடுத்து, பாஸ்கரனை துணை வட்டார வளர்ச்சி அலு வலராகப் பதவியிறக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in