உச்சிப்புளி அருகே கார் மோதி கர்ப்பிணி மரணம்

உச்சிப்புளி அருகே கார் மோதி  கர்ப்பிணி மரணம்
Updated on
1 min read

உச்சிப்புளி அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, கார் மோதி யதில் கர்ப்பிணி உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே பெருங் குளத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மனைவி சத்யப்பிரியா (21). நிறைமாத கர்ப்பிணியான இவர், ராமநாதபுரம்மருத்துவமனையில் பரிசோதனை செய்து விட்டு, தனது மாமியார் வள்ளியுடன் (55) நேற்று முன்தினம் இரவு பெருங்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாலையைக் கடக்க முயன்றனர்.

அப்போது ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த ஆந்திர மாநில கார் இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். சத்யப் பிரியா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார்.

கர்ப்பிணியின் மீது மோதிய காரை அரசு உயர் அதிகாரி ஒருவரின் உறவினர் ஓட்டி வந்ததாகவும், ஆகவே காரை நிறுத்தாமல் சென்றவர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தயங்குவதாகவும் கூறி, அப் பெண்ணின் உறவினர்கள் மற்றும் பெருங்குளம் கிராம மக்கள் போலீஸாரிடம் முறையிட்டனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், டிஎஸ்பி கி. வெள்ளைத்துரை அவர்களை சமாதானம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in