

மதுரை கீழவெளி வீதி தேவாலயம் அருகே 2 நாட்களுக்கு முன்பு உத்தங் குடி பாரதிகணேசன் மகன் முருகானந்தம் (22), ஒரு கும்பலால் தலையைத் துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த முனியசாமி படுகாய மடைந்தார். இதுதொடர்பாக காமராஜர்புரம் சின்ன அலெக்ஸ், அழகுராஜா, பவ்வு என்ற பழனி முருகன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், முனியசாமி (22) மற்றும் 2 சிறுவர்களை தனிப்படையினர் நேற்று கைதுசெய்தனர். மேலும் இருவரைப் பிடித்து விசாரிக்கின்றனர்.