கல்வராயன்மலையில் தொடர் மழை மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டுகிறது கோமுகி அணை

கல்வராயன்மலையில்  தொடர் மழை மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டுகிறது கோமுகி அணை
Updated on
1 min read

கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை அடிவாரத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் 46 அடிவரை நீரை தேக்கி வைக்கும் வகையில் கோமுகி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர் கொள்ளளவு 560.96 மில்லியன் கனஅடி. அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,865 ஏக்கர் விவசாய நிலம், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோமுகி அணையின் நீர் மட்டம் 44 அடியாக உயர்ந்துள்ளது. மொத்த நீர்பிடிப்பு 489.56 மில்லியன் கனஅடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 500 கனஅடியாக உள்ளது. நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணை மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in