புதுச்சேரி காவலர் தற்கொலை

புதுச்சேரி காவலர் தற்கொலை

Published on

புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றியவர் சிவா என்ற சதாசிவம் ( 32). திருமணமான இவர் தீபாவளி பண்டிகைக்கு தனது பூர்வீக கிராமமான திண்டிவனம் அருகே உள்ள தலைக்காணிகுப்பத்திற்கு சென்றார். அவர் நேற்று தனது நிலத்தில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டுபுதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பரிசோதனை செய்த மருத்துவர் கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிரம்மதேசம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in