

தேனி மாவட்டம், ஆண்டிப் பட்டியை அடுத்துள்ள மொட்ட னுத்து ஊராட்சி மன்றத் தலைவ ரும், அமமுகவின் ஒன்றியச் செயலாளருமான கருப்பு என்கிற ராஜன்(44), சசிகலாவின் மூத்த சகோதரர் சுந்தரவதனத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த நேற்று முன்தினம் தேனியில் இருந்து தஞ்சாவூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை தேனியைச் சேர்ந்த பிரபாகர் என்பவர் ஓட்டி வந்தார். இவர் களுடன் அமிர்தம், அமுசு ஆகி யோரும் காரில் வந்தனர்.
நேற்று முன்தினம் பிற்பகல் தஞ்சாவூர்- திருச்சி சாலையில் செங்கிப்பட்டி அருகே வந்த போது, டயர் வெடித்ததில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் வந்த 4 பேரும் படுகாயமடைந்தனர்.சிகிச்சைக்காக தஞ்சை மருத் துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ராஜனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டிடிவி.தினகரன் அஞ்சலி
தேனிக்குக் கொண்டு செல் வதற்கு முன்பாக, தஞ்சாவூர் மருத்துவமனையில் ராஜனின் உடலுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அஞ்சலி செலுத்தினார்.