திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில்  மக்கள் குறைதீர்வு கூட்டங்கள்
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் நேற்று நடைபெற்றன.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மக்கள் குறைதீர்வுக் கூட்டத் தில், வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, மின் இணைப்பு, முதியோர் உதவித்தொகை கேட்டு பலர் மனு அளிக்க வந்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 118 மனுக்களை பெற்றார்.

இதேபோல, நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வுக்கூட்டத் தில் 49 மனுக்களும், வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 11 மனுக்களும், ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 46 மனுக்களும், ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத் தில் 12 மனுக்கள் என மொத்தம் 236 மனுக்களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பொதுமக்களிடம் இருந்து பெற்று, தகுதியுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் முகாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in