Published : 16 Nov 2020 03:13 AM
Last Updated : 16 Nov 2020 03:13 AM

நீலகிரியில் ரூ.200 கோடியில் சாலை விரிவாக்கம்

உதகை, குன்னுார், கூடலூர் பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலை, சிறுபாலம், தடுப்புச்சுவர் என பல்வேறு திட்டங்களில், ரூ.200 கோடி மதிப்பீட்டில் ஆங்காங்கே விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன.

மஞ்சூர்- உதகை பிரதான சாலை உள்ளிட்ட சாலைகளில், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சாலை சீரமைப்பு, தடுப்புச்சுவர், சிறு பாலம் அமைக்கும் பணிகளும், மஞ்சூர் சாலையில்,தேவர்சோலை, கைக்காட்டி இடையே குறுகலாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் இருந்த பகுதி அகலப்படுத்தப்பட்டு தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வரும் கோடை சீசனுக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x