வடமதுரை, நத்தத்தில் இருவேறு சம்பவத்தில் இருவர் கொலை

வடமதுரை, நத்தத்தில்  இருவேறு சம்பவத்தில் இருவர் கொலை
Updated on
1 min read

வடமதுரை, நத்தத்தில் நடந்த தகராறில் இருவர் கொலை செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள எலப்பார்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கருப்புச்சாமி (35). இவரது உறவினர் போஸ் மகன் காமாட்சி (25). காமாட்சியின் உறவினரான ஒரு பெண்ணிடம் கருப்புச்சாமி பழகியுள்ளார். இதைக் கண்டித்த காமாட்சி, கருப்புச்சாமியை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

வடமதுரை போலீஸார் வழக்குப் பதிந்து காமாட்சியைத் தேடி வருகின்றனர்.

நத்தம் அருகே சிறுகுடி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் மகாராஜன் (45). இவரது வீட்டின் அருகே வசிப்பவர் குமரேசன் (52). வீடு கட்டும் பணிக்காக, மகாராஜன் மணல் வாங்கி வீட்டின் முன் கொட்டி வைத்துள்ளார். இதனால் குமரேசனின் குடும்பத்தினர், அவர்களது வீட்டுக்குச் செல்ல இடையூறாகஇருந்தது. இது தொடர்பாக இருவருக்குமிடையே நடந்த தகராறில் குமரேசன், அவரது மகன்கள் ஞானசேகரன் (30),கிருஷ்ணன் (17), உறவினர் ராஜேந்திரன் (54) ஆகியோர் சேர்ந்து மகாராஜனை மரக்கட்டையால் தாக்கினர். படுகாயமடைந்த மகாராஜன், நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நத்தம் போலீஸார் வழக்குப் பதிந்து குமரேசன் உட்பட 4 பேரைக் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in