லாடவரம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை வழங்கிய மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
லாடவரம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை வழங்கிய மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

கலசப்பாக்கம் அடுத்த லாடவரம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.4.40 லட்சம் போனஸ் ஆவின் தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்

Published on

874 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் களுக்கு தீபாவளி போனஸாக ரூ.4.40 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் கலசப் பாக்கம் அடுத்த லாடவரம் கிராமத்தில் நடைபெற்றது.

துணை பதிவாளர் (பொறுப்பு) விஸ்வேஸ்வரன் தலைமை வகித்தார். ஆவின் பொது மேலாளர் இளங்கோவன், துணை பொது மேலாளர் நாச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் காளியப்பன் வரவேற்றார். லாடவரம், கெங்கநல்லூர், நீலாந்தாங்கல், காளிகாபுரம், செதுவாலை, சின்ன லாடவரம் ஆகிய கிராமங்களில் உள்ள 874 பேருக்கு லாப பங்குத் தொகையாக ரூ.4.40 லட்சத்தை மாவட்ட ஆவின் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, "இந்த பகுதியில் இருந்து, ஆவினுக்கு தினசரி 1,339 லிட்டர் பால் கிடைக்கிறது. ஆவினுக்கு முக்கியத்துவம் கொடுத்து கிராம மக்கள் பால் ஊற்றி வருகிறீர்கள். அதனை உணர்ந்துதான், தீபாவளி போனஸாக லாப பங்குத் தொகை வழங்கப்படுகிறது. நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் லாடவரம் கிராமத்தில் ரூ.4 கோடியில் அரசுப் பள்ளிக்கு கட்டிடம் கட்டப்படவுள்ளது" என்றார்.

இதில், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் நாராயணன், முன் னாள் ஒன்றியக் குழு தலைவர் கோவிந்தராஜ், பால் உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் ராஜேஸ்வரிரமேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் குமரகுரு, செயலாளர் புண்ணியகோட்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in