கொமுக தலைவர் தீபாவளி வாழ்த்து

கொமுக தலைவர் தீபாவளி வாழ்த்து
Updated on
1 min read

கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் பெஸ்ட் ராமசாமி வெளியிட்ட அறிக்கையில், "தீய எண்ணங்களை விட்டு, ஒளிபோன்று பிரகாசமாக திகழ வேண்டும் என்பதே இனிய இந்த தீபாவளியின் தத்துவம். தீபாவளியின்போது விளக்கை ஏற்றுவதுடன், மனிதன் தனக்குள் இருக்கும் தீய எண்ணங்கள், பொறாமை, கோபம் போன்றவற்றை அகற்றிவிட்டு, ஞான விளக்குகளை ஏற்றி வாழ்வில் சிறக்க முயற்சி செய்ய வேண்டும்.

மேலும், இந்த கரோனா தொற்றில் இருந்து விடுபட்டு, அனைவரும் நலமுடனும், வளமுடனும் வாழ இறைவனை பிரார்த்திப்பதுடன், சமூக விலகலை பின்பற்றி பாதுகாப்பு நெறிமுறைகளுடன் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். ஒற்றுமையுடன், மனிதநேயத்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாட தீபாவளி வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in