

சிவகங்கை, ராமநாதபுரத்துக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.
சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன் மாற்றப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை ஆணையராகப் பணியாற்றிய பி.மதுசூதனன் ரெட்டி புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த கொ.வீரராகவ ராவ் மாற்றப்பட்டுள்ளார். இவருக்குப் பதிலாக அகதிகள் மறுவாழ்வுத் துறை இயக்குநராகப் பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.