

மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு பாஜக சார்பில் தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டன. மதுரை மாநகர் மாவட்ட பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அப்பிரிவின் செயலாளர் ஏ.செந்தில்வேல் தலைமை வகித்தார். தலைவர் சதீஷ் குமார் முன்னிலை வகித்தார். இதில் மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 35 பேருக்கு இலவச வேட்டி, சேலையை பாஜக மாநில அரசு தொடர்பு பிரிவு செயலாளர் எம்.ராஜரத்தினம், மாநகர் மாவட்ட பாஜக தலைவர் கே.கே.சீனிவாசன் ஆகியோர் வழங்கினர்.