7 மாதங்களுக்கு பிறகு சத்தி - மைசூர் இடையே அரசுப் பேருந்து இயக்கம்

7 மாதங்களுக்கு பிறகு  சத்தி - மைசூர் இடையே அரசுப் பேருந்து இயக்கம்
Updated on
1 min read

சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு, தமிழக அரசு மற்றும் கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 20-ம் தேதி முதல் இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.

தற்போது தீபாவளியையொட்டி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ள தால், 6 நாட்களுக்கு மட்டும் சத்தியமங்கலம்- கர்நாடக மாநிலம் மைசூர் வரை பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. அதேபோல் கர்நாடகாவில் இருந்தும் சத்தியமங்கலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 7 மாதங்களுக்குப் பிறகு நேற்று முதல் மூன்று அரசுப் பேருந்துகள், இரண்டு தனியார் பேருந்துகள் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு இயக்கப்பட்டது. தாளவாடியில் இருந்து சாம்ராஜ்நகர் வரையிலும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், 50 சதவீத இருக்கையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in