

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1977-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்து, 2010-ம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது. இங்கிருந்து 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள், 2 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மன்னார்குடி ரயில் நிலையத்தி லிருந்து சரக்கு ரயில்களை இயக்க தொழிலா ளர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். அதனை ஏற்று சரக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்படுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் டிட்டாகர் என்ற இடத்திலிருந்து 33 சரக்கு ரயில் பெட்டிகளுடன் சாக்கு பண்டல்களை ஏற்றிக் கொண்டு கடந்த 10-ம் தேதி புறப்பட்ட சரக்கு ரயில், இன்று (நவ.13) மன்னார்குடி ரயில் நிலையத்துக்கு வருகிறது.