வள்ளியூரில் ரூ.51 லட்சத்தில் அம்மா பூங்கா திறப்பு

வள்ளியூரில் ரூ.51 லட்சத்தில் அம்மா பூங்கா திறப்பு
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பேரூராட்சியில் ரூ.51 லட்சம் செலவில் அமைக்கப் பட்டுள்ள அம்மா பூங்காவை ராதாபுரம் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை திறந்துவைத்தார். எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம், பேரூராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.36 லட்சம் என்று மொத்தம் ரூ.51 லட்சம் செலவில் வள்ளியூரில் பிரதான சாலையோரம் அம்மா பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் நீர்வீழ்ச்சி, ஜல்லிக்கட்டை உணர்த்தும் வகையில் காளையை அடக்கும் ஆண், ஒட்டகசிவிங்கி ஆகிய பொம்மைகளும், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

விழாவில் வள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் இ.அழகானந்தம், அந்தோணி அமலராஜா, நான்குனேரி, ராதாபுரம் வட்டார வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் செழியன், நகரச் செயலாளர் பொன்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in