காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட பாலதர்ம சாஸ்தா கோயில் குடமுழுக்கு

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட  பாலதர்ம சாஸ்தா கோயில் குடமுழுக்கு
Updated on
1 min read

காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ள பாலதர்ம சாஸ்தா கோயில் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில்பாலதர்மா சாஸ்தா கோயில்அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின. மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவையும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி யாகசாலையில் இருந்து புனிதநீர் குடங்கள் புறப்பட்டு ராஜகோபுரத்தை அடைந்தன. சிவாச்சாரியர்கள் புனித நீரைகோபுர கலசத்தின் மீது ஊற்றகுடமுழுக்கு விழா நடைபெற்றது.

இந்த குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில்நிர்வாகக் குழுவின் நிர்வாகிகள் செய்திருந்தனர். குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து பணாமுடீஸ்வரர் கோயிலில் இருந்து பால்குடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. பால் குடங்கள்ஆலயத்தை வந்தடைந்ததும் மூவர் பாலதர்ம சாஸ்தாவுக்குசிறப்பு பாலாபிஷேகம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அன்னதானமும், ஊஞ்சல் சேவையும் நடைபெற்றன. இரவு திருவிளக்கு பூஜையும், ஜோதி தரிசனமும் நடைபெற்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in