ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியால் மண்டல அலுவலகம் இடமாற்றம்

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியால் மண்டல  அலுவலகம் இடமாற்றம்
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருவதால், சந்திப்பு அரசன் பேக்கரிக்கு பின்புறம் இயங்கி வந்த தச்சநல்லூர் மண்டல அலுவலகமானது இடமாற்றம் செய்யப்பட்டு, பொருட்காட்சி திடல் எதிர்புறம் உள்ள திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகப் பகுதியில் இடதுபுறக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தண்ணீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை திட்ட கட்டணம் மற்றும் வரியினங்களை இந்த அலுவலகத்தில் செயல்படும் கணினி வரிவசூல் மையத்தில் செலுத்தலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in