

மருத்துவ கல்வியில் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் இணைக்க வேண்டும் என்ற கோரி்ககையை வலியுறுத்தி, தமிழ்நாடு தனியார் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கம் சார்பில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகி இளங்கோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கருணாமூர்த்தி, ராஜகோபால், மாயவன் மற்றும் உதயக்குமார், அனுக்குமார், நரேந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.