தூத்துக்குடியில் ரூ.368.75 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார் 15,792 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு

தூத்துக்குடி வந்த தமிழக முதல்வர் கே.பழனிசாமியை விமான நிலையத்தில் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜு, வி.எம்.ராஜலெட்சுமி, ஆர்.பி.உதயகுமார், நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி  ஆகியோர் வரவேற்றனர்.
தூத்துக்குடி வந்த தமிழக முதல்வர் கே.பழனிசாமியை விமான நிலையத்தில் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜு, வி.எம்.ராஜலெட்சுமி, ஆர்.பி.உதயகுமார், நெல்லை முன்னாள் மேயர் புவனேஸ்வரி ஆகியோர் வரவேற்றனர்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து தமிழக முதல்வர் கே.பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார். ரூ.368.75 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

தமிழக முதல்வர் கே.பழனிசாமி விமானம் மூலம் நேற்று காலைதூத்துக்குடி வந்தார். அவரை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் செ.ராஜு, வி.எம்.ராஜலெட்சுமி, எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், பி.சின்னப்பன், மாவட்ட ஆட்சியர்கள் சந்தீப் நந்தூரி (தூத்துக்குடி), ஷில்பா பிரபாகர் சதீஷ் (நெல்லை), தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பாளையங்கோட்டை கேடிசி நகர்ரவுண்டானா அருகே மாவட்ட அதிமுக செயலாளர் கணேசராஜா தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்டச்செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட செயலாளர் குட்டியப்பா என்ற கிருஷ்ணமுரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, நாகர்கோவில் சென்றமுதல்வர் அங்கு நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். அங்கிருந்துஇன்று (நவ.11) காலை 8 மணிக்குதூத்துக்குடி வருகிறார். 8.45 மணிக்குதூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சென்று ரூ.16 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள புற்று நோய்க்கான லீனியர் ஆக்ஸிலேட்டர் நவீன கதிரியக்க சிகிச்சைகருவி மற்றும் ரூ.71.61 லட்சம்மதிப்பிலான மத்திய ஆய்வக கட்டிடம் ஆகியவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறார்.

பின்னர் ரூ.22.37 கோடி மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். ரூ.328.66கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 15,792 பேருக்கு ரூ.37.55 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, கரோனா தடுப்புப்பணிகள் குறித்து அனைத்துத்துறைஅலுவலர்களுடன் ஆய்வு நடத்து கிறார். மதியம் விருதுநகர் செல்கி றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தலைமையில்2,150 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in