திண்டுக்கல்லில் தேசிய சட்டப் பணிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல்லில் தேசிய சட்டப் பணிகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
Updated on
1 min read

தேசிய சட்ட பணிகள் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலத்தை, மாவட்ட முதன்மை நீதிபதி ஜமுனா தொடங்கிவைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி பாரதிராஜா முன்னிலை வகித்தார். பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படும் வகையில், இருசக்கரவாகன ஊர்வலத்தில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in