தேனி கண்மாய் கரைகளில் தன்னார்வலர்கள் பனை விதை நடவு

சின்னமனூர் செங்குளம் கண்மாய் கரையில் பனை விதைகளை நடவு செய்த தன்னார்வலர்கள்.
சின்னமனூர் செங்குளம் கண்மாய் கரையில் பனை விதைகளை நடவு செய்த தன்னார்வலர்கள்.
Updated on
1 min read

தேனியில் உள்ள கண்மாய் கரைகளில் பனைவிதைகளை நடவு செய்யும் பணி நடைபெற்றது.

தேனி அருகே கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய், வீரப்ப அய்யனார் கோயில், சின்னமனூர் செங்குளம் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வலர்கள் அன்பழகன், ராம் பிரகாஷ், விக்னேஸ் பாபு, அபினேஷ், ராஜேஸ்வரன் தலைமையில் பனை விதைகளை நட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 2-வது ஆண்டாக பனை விதைகளை நடவு செய்து வருகிறோம். பனைக்கு மழைநீரைச் சேமித்து வைக்கும் ஆற்றல் உண்டு. நிலத்தடி நீர்மட்டம் மேம்படவும் பனை மரங்கள் உதவும். பருவநிலைக்கு ஏற்ப பதநீர், பனங் கிழங்கு, நுங்கு உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கும். பனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து நடவுப் பணியை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

சஞ்சய், பசுமை செந்தில், கண்ணன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in