

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் புறநகர் வடக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் பாலகுரு தலைமை வகித்தார். மேற்கு ஒன்றியச் செயலாளர்கள் பாஸ்கரன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ், நகர் செயலாளர்கள் சந்திரசேகர், பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் மார்நாடு பேசினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டனர். கிளை செயலாளர்களுக்கு பூத் கமிட்டி படிவம் வழங்கப்பட்டன.