குடும்பத் தகராறில் சத்திரப்பட்டி பெண் ஊராட்சித் தலைவர் தற்கொலை

குடும்பத் தகராறில் சத்திரப்பட்டி பெண் ஊராட்சித் தலைவர் தற்கொலை
Updated on
1 min read

ஒட்டன்சத்திரம் அருகே சத்திரப்பட்டி ஊராட்சித்தலைவர் இந்திரா. இவர் திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஒட்டன்சத்திரம் ஒன்றியம், சத்திரப்பட்டி ஊராட்சித்தலைவர் பிரவீன்குமார் மனைவி இந்திரா (37). இவரது கணவர் திண்டுக்கல்லில் தொழில் நடத்தி வருவதால், திண்டுக்கல் அருகே சென்னம நாயக்கன்பட்டியில் வசித்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்திரா தனது சொந்த ஊரான சத்திரப்பட்டி ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் இவர் குடும்பத்தை கவனிக்க திண்டுக்கல்லுக்கும், ஊராட்சி நிர்வாகத்தை கவனிக்க சத்திரப்பட்டிக்கும் சென்று வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இந்திரா சென்னம நாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in